புயலுக்குப் பின் அமைதி - Part 4
Previous Part >> Click Here<<
மரணத்தின் விளிம்பில் ஒரு சாகசம்!நீங்கள் சாகசங்களை விரும்பும் நபராக இருந்தால், இந்தக் கதையின் ஒவ்வொரு வரியும் உங்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும். நட்பும், துணிச்சலும், இயற்கையின் கோபமும் நிறைந்த ஒரு பயங்கர இரவில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
தொடக்கம்: சலசலக்கும் அலைகளும் ஒரு மெல்லிய அச்சுறுத்தலும் ப்ளூ ஸ்டோன்' (Blue Stone) என்ற சொகுசுக் கப்பலில், ஐந்து துடிப்பான இளைஞர்கள் MOJO, ராகுல், சரவணன், கணேஷ், மற்றும் சங்கர் கடலின் நடுவே தங்கள் மகிழ்ச்சியான பயணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
(Steering) ராகுலின் கையில் இருந்தது. இரட்டை மெத்தைகள், குளிர்சாதனப் பெட்டி, ரேடியோ எனப் படகு வசதிகளால் நிரம்பி வழிந்தது.
அப்போதுதான் வானம் தன் நிறத்தை மாற்றத் தொடங்கியது. கருமை படர்ந்தது. மழை துளி துளியாக ஆரம்பித்து, காற்றின் வேகம் அதிகரித்தது. இது ஒரு சாதாரண மழை அல்ல, இது ஒரு பேரழிவுக்கான அறிகுறி.
ராகுல் Steering திருப்பியபடியே, "கடவுளே... விடியறதுக்குள்ள இந்தக் கடலைத் தாண்டிரனும்!" என்று மனதுக்குள் வேண்டியது அவனது பதற்றத்தை வெளிக்காட்டியது.
அலறும் ரேடியோ: மரணச் செய்தி சங்கரும் கணேஷ் ம் ஓய்வெடுக்கச் சென்றிருக்க, சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து, அந்தக் கப்பலின் அமைதியைக் குலைத்து ஒரு செய்தி ரேடியோவில் ஒலித்தது:
"அபாய எச்சரிக்கை! யூனுஸ் கடலில் இருந்து உருவான புயல் அதிவேக ராட்சசப் புயலாக மாறி கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்... உயரமான இடங்களை நோக்கிச் செல்லுங்கள்!"
MOJO உட்பட ஐந்து நண்பர்களுக்கும் ஒரு நொடி தூக்கி வாரிப் போட்டது! தங்கள் கண்முன்னே வரப்போவது சாதாரணமாக இருக்காது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். இதுவரை கண்டிராத புயல்! மரணம் நிச்சயம் என்ற பயம் ஒரு நிழலாய் அனைவரின் மனதிலும் படர்ந்தது.
வெடித்த பதற்றம்: குற்றம்சாட்டும் நண்பர்கள்"நான் அப்பவே சொன்னேன்! கடலுக்குப் போக வேண்டாம்னு. இதுக்கெல்லாம் காரணம் ராகுல்தான். அவசரப் புத்திக்காரன்!" என்று கணேஷ் பதற்றத்துடன் கத்திக் கொண்டு ஓடிவந்தான். சரியாக அந்த நொடியில், வானம் இடி முழக்கத்துடன் வெடித்தது. மழை பயங்கரமாகக் கொட்டியது. எதிரே வந்த அலைகள் மலைகளைப் போல் திரண்டு படகை நோக்கிச் சீறி வந்தன.
ராகுல் பயத்தில் Steering நழுவவிட, பின்னர் அதைச் சமாளிக்க முயன்றான். ஆனால், அலைகளின் வேகம் எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறியது. Steering அவனைச் சுழற்றியடிக்க, தாங்க முடியாத வலியில் அதைக் கைவிட்டுவிட்டுக் கீழே அமர்ந்து அழுதான். படகு அங்கும் இங்கும் பயங்கரமாக ஆடியது.
மாற்றத்தைக் கொண்டு வந்த MOJO: சரவணனும் MOJOம் கேப்டன் அறைக்கு ஓடி வந்தபோது, கதறிக் கொண்டிருந்த ராகுலைப் பார்த்தனர். அப்போது, ஒரு பிரமாண்டமான சத்தம்! கப்பலில் வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு எஸ்கேப் போர்ட் (Escape Boat) புயலில் சிக்கி சுக்கு நூறாக உடைந்திருந்தது. பிழைப்பதற்கான கடைசி நம்பிக்கையும் போனது!
படகு எந்த நேரமும் கவிழ்ந்துவிடும் நிலைக்குச் சுழலத் தொடங்கியது. உயிர் காக்க வேறு வழியில்லை என்று உணர்ந்த MOJO, சுக்கானை நோக்கி ஓடினான். அலையின் வேகத்தை எதிர்த்துத் திருப்பினால் படகு கவிழ்ந்துவிடும் என்று உணர்ந்த அவன், அலை எந்தப் பக்கம் செல்கிறதோ அந்தப் பக்கமே Steering திருப்பினான்.சரியான கணிப்பு! படகு அலையின் உட்புறத்தைக் கிழித்துக் கொண்டு மேலெழுந்து, மீண்டும் நீச்சலிடத் தொடங்கியது. எப்படித் திருகினால் படகு வளைந்து கொடுக்கும் என்பதை MOJO அந்தக் கணத்தில் கற்றுக் கொண்டான். MOJO ஒருவன் மட்டும் Steering பிடித்து அலைகளின் மீது படகைச் செலுத்த, மற்ற நண்பர்கள் அனைவரும் இரும்புக் கம்பிகளைப் பிடித்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.
மரணத்தின் முதல் பிடி: ஒரு நண்பனின் தியாகம் "மச்சான்! எமர்ஜென்சி துப்பாக்கி இருக்கும், அதை எடுத்து வெளியே சுடலாம். பக்கத்துல ஏதாவது பெரிய கப்பல் இருந்தா நம்மளை காப்பாத்த வாய்ப்பிருக்கு!" என்று MOJO கத்தினான். ராகுலும் கணேஷும் அந்தத் துப்பாக்கியை எடுக்கச் சென்றனர். அவர்கள் துப்பாக்கியைத் தூக்கிய அதே வேளையில்...
யாருமே எதிர்பாராத விதமாக, ஒரு பிரம்மாண்ட அலை வந்து படகை மொத்தமாக மூடி, தலைகீழாகத் திருப்பிப் போட்டது.
MOJO மீண்டும் தனது திறமையால் படகைச் சமாளித்து நேராக்கினான். உடல் முழுவதும் நனைந்து, நடுங்கிப் போயிருந்த MOJO, திரும்பிப் பார்த்தான்.
பக்கத்தில் அவனது இரண்டு நண்பர்கள் மட்டும் அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர். "டேய்! அவங்க ரெண்டு பேரும் எங்கடா போனாங்க?" என்று MOJO கத்தினான். அனைவரும் ஒருமித்த குரலில் கத்தினர்: "ராகுல்...! கணேஷ்...!"
மேலிருந்து ஒரு அழுகுரல் கேட்டது. அது ராகுல்!
ராகுல் கதறினான்: "மச்சான்... கணேஷ் போயிட்டான்டா...!" அனைவருக்கும் பேரதிர்ச்சி! ஒரு உயிர் நண்பன், கடலில் போனான். MOJO-வின் மனம் சுக்கு நூறாக உடைந்தது.
கடைசி முயற்சி: MOJOவும் பிணைக்கப்பட்ட ராகுலும் - புயலும் மழையும் ஓயவில்லை. இன்னும் வேகமாகப் படகை இழுத்துச் சென்றது.
மேலே கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ராகுல், தன் வலி தாங்காமல், "என் கை வலிக்குதுடா. நானும் கணேஷோட போறேன். என்ன மன்னிச்சிடுங்கடா!" என்று கத்தினான்.
MOJO உறுதியாகப் பேசினான்: "டேய் ராகுல்! என்ன ஆனாலும் நீ அந்த கையை விடக்கூடாது. கணேஷ் தான் கடைசியா போன ஆளா இருக்கணும். இனி ஒரு உயிரை நான் இழக்க மாட்டேன்!"
சரவணனிடம் Steering ஒப்படைத்துவிட்டு, MOJO படகின் கூரை மீது ஏறி ராகுலை நோக்கி முன்னேறினான். புயலால் நிலைதடுமாறி விழுந்தாலும், காலால் கம்பியைப் பிடித்துச் சமன் செய்து மீண்டும் ஊர்ந்து சென்றான்.
ராகுலிடம் ஒரு கயிற்றை இடுப்பில் கட்டிய மோஜோ, ராகுலை கீழே இறக்கினான். கீழே இருந்த நண்பர்கள் ராகுலைப் பத்திரமாகப் பிடித்துக் கொண்டனர். மோஜோவும் அதேபோல் கயிற்றைக் கட்டிக் கொண்டு கீழே இறங்க முயன்றான். புயலின் வேகத்தில் படகு அதிகமாய்த் தடுமாற, மேலே தொங்கிக் கொண்டிருந்த மோஜோவும் தள்ளாடினான்.
விழுங்குறிய கடல்: முடிவற்ற ஒரு சஸ்பென்ஸ் மோஜோ மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருந்த வேளையில்...
கிழக்குப் புறமாக இருந்து ஒரு ராட்சச அலை வந்து படகின் மீது மோதியது!மோஜோ கையில் இருந்த கயிறு அறுந்து, அவன் கடலுக்குள் விழுந்தான். அவன் கீழே விழும்போது, அவனை அந்தக் கடல் விழுங்குவது போலவே இருந்தது.
ஆம், நமது கதையின் தலைவன் இந்த இடத்தில் கடலில் விழுங்கிவிட்டான்.
தொடரும்...
மோஜோவுக்கு என்ன ஆனது?
மீதமுள்ள நண்பர்கள் தப்பிப்பார்களா?
புயல் எப்போது ஓயும்?
அடுத்த அத்தியாயத்தில் இதன் தொடர்ச்சியைப் படிக்கத் தயாராகுங்கள்! உங்கள் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பதிவு செய்யுங்கள்!

Comments
Post a Comment