புயலுக்குப் பின் அமைதி - Part 3
Previous Part >> Click Here<<
விமான நிலைய அறிவிப்பும் வீணான கனவும்
விடுமுறை நாள். வெளியே கனத்த மேகங்கள் நகரின் மீது ஒரு இருண்ட போர்வையை இழுத்திருக்க, நண்பர்கள் ஐவரும் தங்கள் கனவுத் தீவை நோக்கிய பரபரப்புடன் விமான நிலையத்தில் காத்திருந்தனர். திடீரென்று, ஒலிபெருக்கியில் ஒரு அதிர்ச்சி அறிவிப்பு முழங்கியது:
"அவசர அறிவிப்பு! யூனஸ் புயலின் தீவிரத்தன்மை காரணமாக, அனைத்து விமான சேவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்."
Mojo-வும் அவனது நண்பர்களும் நிலைகுலைந்தனர். அவர்களின் ஆசைகள் அனைத்தும் அந்த ஒரு வரியில் நொறுங்கி விழுந்தன.
சரவணன் விரக்தியுடன் தரையில் அமர்ந்து, "என்னடா மச்சான் இது! இவ்ளோ கஷ்டப்பட்டு, வேலைகளை விட்டுட்டு, ஐலண்டுக்குப் போயிடலாம்னு கிளம்பி வந்தா, எல்லாமே வீணாப் போச்சுடா! நம்ம ட்ரிப் பிளான் பண்ணினாலே இப்படித்தான் தடங்கல் வரும்," என்று தலையில் கைவைத்துக் கவலைப்பட்டான். நண்பர்கள் அனைவரும் சிறிது நேரம் அமைதியாக, அடைபட்ட மனதுடன் அமர்ந்திருந்தனர்.
சிரித்த ராகுலும் துணிச்சலான திட்டம்
அந்த இறுக்கமான அமைதியைக் கிழித்து, திடீரென்று ராகுல் புன்னகைத்தான். அவனைப் பார்த்த Mojo-வும் மற்ற நண்பர்களும் எரிச்சலுடன் முறைத்தனர்.
Mojo: "அடேய், என்னடா சிரிப்பு இது? இங்க அவஅவன் கடுப்புல இருக்கும்போது உனக்கு சிரிப்பா இருக்கா?"
ராகுல்: "அது இல்லைடா மச்சான்! எல்லாரும் இங்க வாங்கடா," என்று மெல்லிய குரலில் அனைவரையும் நெருங்கி அழைத்தான். அவர்கள் சூழ்ந்ததும், ரகசியமான குரலில் சதித்திட்டத்தை அரங்கேற்றினான்: "டேய், புயல் இப்போதைக்கு நம்ம யூனஸ் கடல் கரையை ஒட்டித்தான் வருது. அது இங்க வர இன்னும் சரியாக இரண்டு நாட்கள் ஆகும்."
சங்கர் (நக்கலாக): "ஓஹோ! இவரு பெரிய வானிலை நிபுணர் ராகுல் ராமனாதனாக்கும். இவரு சொன்னதுக்கு அப்பறம்தான் மழையே வரும்போல!"
ராகுல் (அதைக் கண்டுகொள்ளாமல்): "அதனால இல்லைடா. என் அப்பாகிட்ட ஒரு High-Speed Luxury BOAT இருக்கு. அது நல்ல HIFI-ஆன படகுடா!"
சரவணன்: "சரி, அதுக்கு இப்போ என்ன சம்பந்தம்?"
ராகுல்: "மச்சான், அந்த படகை எங்க அப்பாவுக்குத் தெரியாம எடுத்து, இன்னைக்கு நைட்டுக்குள்ள கடலைக் கடந்து, நாம புக் பண்ணின ஐலண்டுக்குப் போயிரலாம்! நாளைக்கு காலைல அங்கதான் நமக்கு விடியல்!"
சாகசத்தின் அழைப்பு
கணேஷ்: "மச்சான், இவன் உண்மையிலேயே மெண்டல் ஆயிட்டான்டா. இவனைக் கூட்டிட்டு வந்திருக்கவே கூடாது!"
Mojo: "ஏன்டா, என்னாச்சு?"
கணேஷ்: "அப்புறம் என்னடா? புயல் வருதுன்னு அறிவிச்சிருக்காங்க. இவன் படகை எடுத்துட்டு கடலுக்குள்ள போ என்று சொல்றான். எல்லாரும் போய் சாவதற்காகவா? நீ வேணும்னா போ, நாங்க வரலை!"
ராகுல்: "அப்புறம் எதுக்குடா Trip-ன்னு சொல்லி என்னை வரச் சொன்னீங்க? ரொம்ப நாள் கழிச்சு சந்திக்கிறோம். ஒரு நினைவில் வைத்துக்கொள்ளும் மெமோரபிள் சாகசம் இருக்க வேண்டாமா? ரிஸ்க் எடுக்க வேண்டாமா மச்சான்?"
Mojo இரண்டு தரப்பையும் நிதானமாக யோசித்தான். பின்பு அவன் ஒரு முடிவுக்கு வந்தான்: "மச்சான், இன்னைக்கு நைட்டுக்குள்ள கரையை கடந்துடலாம் இல்லையாடா?" அவன் குரலில் ஒரு இளமையான துள்ளல் இருந்தது. என்ன செய்வது? இளம் ரத்தம் துள்ளத் தானே செய்யும்! புயலின் எச்சரிக்கைக்கு மத்தியில், அந்தத் தீவுக்குச் செல்ல வேண்டும் என்ற வெறி அவர்களை ஆட்கொண்டது. ஐவரும் ஒரு மனதோடு "சரி!" என்று முடிவெடுத்தனர்.
காட்டுவழிப் பயணமும் தப்பிக்கும் படகும்
ஐவரும் உடனடியாகத் தங்கள் காரில் ஏறி, இரவின் நிசப்தத்தில், மியூனஸ் கடற்கரையை நோக்கிச் சென்றனர். ஆனால், கடற்கரைக்குள் நுழைவதற்கு "உள்ளே செல்ல தடை" என்ற எச்சரிக்கைப் பலகை பளிச்சென்று தெரிந்தது. பதினைந்து காவலர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்தனர். அவர்களை மீறி உள்ளே செல்ல இயலாது.
எனவே, வெகு தூரத்தில் தங்கள் காரை நிறுத்திவிட்டு, பின்னர் காட்டு வழியாகப் புதர்களுக்குள் ஊர்ந்து கடற்கரையை வந்தடைந்தனர். அங்கு வரிசையாக நிறைய படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ராகுல்: "டேய் மச்சான், இங்க 'Blue Stone'ன்னு கோல்டன் கலர்ல எழுதியிருக்கும். அதுதாண்டா என்னோட அப்பாவோட சொந்த BOAT. அதை யாருக்கும் தெரியாம வேகமா கண்டுபிடிங்கடா."
அந்த நேரத்தில், கடலில் கருமையான மேகங்கள் திரண்டு வருவதைப் பார்த்த கணேஷிற்கு மனதிற்குள் சிறிது குழப்பமும், பயமும் வந்தது. அவன் அங்கேயே தயங்கி நின்று விட்டான். பக்கத்தில் நின்றிருந்த சங்கர், அவனது தோளில் தட்டி: "டேய் மச்சான், அதெல்லாம் ஒன்னும் இல்லடா. வா! நாங்க எல்லாம் இருக்கோம்ல, ஏன் பயப்படுற?" என்று கூறி அவனையும் ஊக்கப்படுத்தினார்.
பின்பு ஐவரும் தேடி, ஒருவழியாக அந்தப் படகைக் கண்டுபிடித்தனர். பார்ப்பதற்கே அந்த BOAT ஒரு அழகான சொகுசுப் படகு போல இருந்தது. அதிவேகமாகச் செல்லும் திறன் கொண்டது; அத்துடன் அதிக கணினி வசதியும் கொண்டது. எந்தப் புயலையும் தாங்கக் கூடிய வகையில் அது அமைந்திருந்தது.
ராகுல்: "மச்சான், மெதுவா இருங்கடா. யாராவது பாத்திடப் போறாங்க! இன்ஜின் ஸ்டார்ட் பண்ண உடனே வண்டியை நிறுத்தாம கடலுக்குள்ள ஓடிடலாம்!"
ராகுலுக்கு நன்றாகப் படகு ஓட்டத் தெரியும் என்பதால், நம்பிக்கையுடன் நண்பர்கள் படகின் மீது வேகமாக ஏறினார்கள். ஆனால், அவர்கள் ஏறிக் கொண்டிருக்கும்பொழுது, ஒரு காவலர் இதைப் பார்த்து விட்டார்! அவர் அங்கிருந்து விசில் அடித்துக் கொண்டு ஓடி வருகிறார்!
சரவணன் (பதட்டத்துடன்): "அய்யய்யோ! காவலர் பார்த்துவிட்டார் டா! மேல ஏறுங்கடா, சீக்கிரம்!"
ஐவரும் வேகவேகமாகக் கத்தி, விரைவாகப் படகைக் கடலுக்குள் செலுத்தினர். அந்த அதிவேகப் படகு, ஆரம்ப அலைகளைக் கிழித்து மின்னல் வேகத்தில் முன்னேறியது. தங்கள் சாகசத்தின் முதல் தடையைத் தாண்டி விட்ட மகிழ்ச்சியில் நண்பர்கள் புன்னகைத்தனர். ஆனால், அவர்களுக்கு முன்னால் காத்திருந்த யூனஸ் புயலின் கோபத்தை அவர்கள் இன்னும் உணரவில்லை.
Next part >> Clike Here <<

Try to more stores
ReplyDelete